மென்பொருள் பொறியியல் சர்வதேச மாநாடு
மென்பொருள் பொறியியல் சர்வதேச மாநாட்டில் மாநாட்டின் அமைப்புக்குழுத் தலைவர் கே.அனந்த கிருஷ்ணன், இந்திய சம்ப்யூட்டர் சங்கத் தலைவர் எஸ்.மகாலிங்கம், மாநாட்டின் திட்டக்குழுத் தலைவர் ரமேஷ் கோபாலசாமி, இந்திய சம்ப்யூட்டர் சங்கத்தின் 20து பிரிவுத் தலைவர் எச்.ஆர்.மோகன் ஆகியோர் பங்கேற்றனர். மாநாட்டைத் துவக்கி வைத்து டிசிஎஸ் நிறுவன தலைமை நிதி ஆலோசகர் எஸ்.மகாலிங்கம் பேசுகையில், தொழில் துறையில் உருவாகும் சவால்களைச் சமாளிப்பதில், அதற்கான பணியாளர்களைத் திட்டமிடுதல், முதலீட்டிலிருந்து கிடக்கும் வருவாயைக் கணக்கிடுதல், தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதல் போன்றவை முக்கிய பங்காற்றுகின்றன என்றார். மாநாட்டில் பிரபல ஐடி கல்வியாளர் எச்.என்.மகாபாலா கவுரவிக்கப்பட்டார்.