சாதனைப் படைத்த கரூர் மாணவன்
கரூர்: கரூரில் தனியார் பள்ளி மாணவன் தமிழ் எழுத்துகளையும் நீளமான ஆங்கில வார்த்தைகளையும், குறைந்த நேரத்தில் சொல்லி டிஸ்கவர் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார்.கரூர் வெண்ணைமலை பரணி வித்யாலயா பள்ளி இரண்டாம் வகுப்பு சாரணர் மாணவன் திவ்ய தர்ஷன் 7. இவர் பள்ளியில் நடந்த விழாவில்247 தமிழ் எழுத்துகளை 28 வினாடிகளிலும், நீளமான 10 ஆங்கில வார்த்தைகளை 40 வினாடிகளிலும் சொல்லி டிஸ்கவர் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்தார். இதற்கு முன்பாக தமிழ் எழுத்துகளை புதுச்சேரியை சேர்ந்த மாணவி ரித்திகா ஒரு நிமிடம் 40 வினாடிகளில் சொல்லியுள்ளார். அதேபோல் நீளமான ஆங்கில வார்த்தைகளை குஜராத் மாநிலத்தை சேர்ந்த மாணவன் குப்தா 81 வினாடிகளில் சொல்லியுள்ளார். புதிய சாதனை படைத்த மாணவன் திவ்யதர்ஷனுக்கு, டிஸ்கவர் புக் ஆப் ரெக்கார்டு நடுவர் பாலாஜி பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கினார். பரணி பார்க் சாரணர் மாவட்ட தலைவர் மோகனரங்கன், துணைத் தலைவர்கள் பத்மாவதி, சுபாஷினி, பள்ளி முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியம், பள்ளி முதல்வர் சுதாதேவி உள்பட பலர் பங்கேற்றனர்.