உள்ளூர் செய்திகள்

சிறப்பு பள்ளியில் மாணவர் சேர்க்கை

திருவள்ளூர்: பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சென்னை பூந்தமல்லியில் செயல்படும் பார்வைத்திறன் குறை உள்ளோர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2023 - 24ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில் தரமான உணவுடன் கூடிய விடுதி வசதி, கல்வி உதவித் தொகை மற்றும் சீருடை வழங்கப்படுகிறது. மாணவர்கள் பாடங்களை மின்னணு முறையில் பதிவு செய்து, காதால் கேட்டு பயில உதவி செய்வதுடன், தேர்வின் போது, சொல்வதை எழுதும் தேர்வு உதவியாளர் வசதியும் செய்து தரப்படும். இப்பள்ளியில் பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவ, மாணவியர் சேர்ந்து கல்வி மற்றும் இதர பயிற்சியை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்