அறிவியல் பூங்காவில் பார்க்கலாம் ராக்கெட்!
கோவை: குழந்தைகளின் அறிவியல் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் விதமாக டாடாபாத், அழகப்பா ரோட்டில் உள்ள அறிவியல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.உள்ளே சென்றதும் சுற்றுச்சுவர்களில் உலக விஞ்ஞானிகளின் புகைப்படம், அவர்கள் பிறந்த தேதி, கண்டுபிடிப்பு விவரங்கள் இடம் பெற்றிருக்கும். நீர்வீழ்ச்சி, மணி கோபுரம், இசை குழாய், ஆட்டோமொபைல் மாதிரி, மழை மானி, ஈர மானி, காற்று வேக அளவு, நியூட்டன் மூன்றாவது விதி, ஒளியின் திசை வேகம் எப்படி பயன்படுத்துவது, கண்ணாடிகளுடன் விளையாட்டு, தனிம அட்டவணை, அவை இயக்கம், டி.என்.ஏ., மாதிரி உள்ளிட்ட பல்வேறு அறிவியல் சார்ந்த பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பொருட்களை நேரில் பார்ப்பது மட்டுமின்றி, செயல்முறையாக செய்து பார்க்கையில் அறிவியலின் இயக்கங்கள் குறித்து, குழந்தைகளால் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது.பாம்பு கடித்தால் தடுப்பது, மழைநீர் சேகரிப்பு முறை, தீ பாதுகாப்பு, நீர் பாதுகாப்பு குறித்து வரை படங்களும் இடம் பெற்றுள்ளன. குட்டீஸ்க்கு பிடித்த அறிவியல் விஞ்ஞானி அப்துல் கலாம் செலுத்திய, ராக்கெட்டையும் கண்டு வியக்கலாம். இந்த பூங்கா காலை 8:00 முதல் மாலை 7:00 மணி வரை திறந்திருக்கும். அறிவியல் பூங்காவுக்கு தங்கள் குழந்தைகளுடன் பெற்றோர் ஒரு விசிட் அடிக்கலாம். கூடவே, ஒரு பேனா, நோட்டு எடுத்துக் கொண்டால் உதவியாக இருக்கும்!