உள்ளூர் செய்திகள்

பள்ளியிலேயே பொது அறிவுப் பயிற்சி

சிவகங்கை: மாணவர்களின் பொது அறிவை மேம்படுத்த, பள்ளிகளில், ‘தளிர் திறன் திட்டத்தை’ செயல்படுத்த, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு உயர், மேல்நிலை பள்ளிகளில், ஏழு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள், பள்ளி இறுதி படிப்பு முடித்துச் செல்லும் போது, பொது அறிவு, வேலைவாய்ப்பு வழிமுறைகளை அறிய வேண்டும். இதற்காக நடப்பு கல்வி ஆண்டு முதல் ஆறு ஆண்டிற்கு, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி தரப்படும். தொண்டு நிறுவனத்தோடு இணைந்து, ஒரு பள்ளியில் இரு ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். இவர்கள் மாணவர்களுக்கு பயிற்சி தருவர். இதற்காக பள்ளிதோறும் ‘எல்சிடி’ - ‘டிவிடி’ பிளேயர் வசதி கொண்ட ‘மல்டிமீடியா’ அறை ஏற்படுத்தப்படும். இத்தகவலை முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்