உள்ளூர் செய்திகள்

புத்தக அட்டையில் நுழைவுத்தேர்வு விபரம்

விமானப்படை பள்ளிகளில் பாடபுத்தகங்களின் அட்டைகளில், அத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தகவல்கள் ஒவ்வொரு ஆண்டும் அச்சிடப்படுகிறது. இதை தமிழக அரசும் பின்பற்ற வேண்டுமென, கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும், கல்விநிறுவனங்களில் சேரும் வகையில், 80க்கும் மேற்பட்ட நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.அதில், நீட்., ஜே.இ.இ., நாட்டா., கேட்., உள்ளிட்ட மிகவும் குறைவான தேர்வுகளில் மட்டுமே, தமிழக மாணவர்கள் பங்கேற்கின்றனர். இது போன்ற நுழைவுத்தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு நம் மாணவர்களிடம் மட்டுமின்றி, ஆசிரியர்கள், பெற்றோரிடமும் குறைவு. கல்வியாளர் வனிதா கூறுகையில், விமானப்படையின் கீழ் செயல்படும் பள்ளிகளில், ஆரம்ப வகுப்பு முதல் பாடபுத்தக அட்டைகளில், விமானப்படை வேலை வாய்ப்புகள், பங்கேற்பதற்கான தேர்வுகள், ஊதிய விகிதம், தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அச்சிட்டு வழங்கப்படுகின்றன. சிறு வயது முதல் இதை பார்த்து வளரும் குழந்தைகளுக்கு, சரியான வயதில் முடிவுகளை எடுக்க பக்குவம் கிடைத்துவிடும். தமிழக அரசும் இதை பின்பற்றினால், பெரிய மாற்றங்கள் ஏற்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்