தென்காசி, நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை
ஊட்டி: தென்காசி, நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் காற்றின் காரணமாக இன்று ((ஜூலை 7) ஒரு நாள் மட்டும் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் திரு அம்ரித் அறிவித்துள்ளார்.