இன்று உலக மக்கள்தொகை தினம்
மக்கள்தொகையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஜூலை 11ல் உலக மக்கள் தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1987 ஜூலை 11ல் உலக மக்கள்தொகை 500 கோடியை தொட்டது. இதை நினைவுபடுத்தும் விதமாக இத்தினத்தை ஐ.நா., உருவாக்கியது. உலக மக்கள் தொகை 1950ல் 253 கோடியாக இருந்தது. 2011ல் 700 கோடி ஆனது. தற்போது 800 கோடி. இது 2030ல் 850 கோடி, 2050ல் 970, 2100ல் 1090 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.