உள்ளூர் செய்திகள்

லம்பானி பழங்குடியினர் கின்னஸ் சாதனை

ஹம்பி: நாடோடி குழுவான லம்பானி பழங்குடியின மக்கள், அதிக எண்ணிக்கையில் தனித்துவமான எம்பிராய்டரிங் தொகுப்புகளை உருவாக்கி செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர்.கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள நாடோடி சமூகமான லம்பானி பழங்குடியின பெண்கள், அதிக எண்ணிக்கையிலான எம்பிராய்டரி பேட்ச்களை தயாரித்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். ஜி 20 கலாச்சார பணிக்குழு கூட்டத்தின் துவக்க நாளில், சுமார் 450 லம்பானி கைவினைஞர்கள் 1,755க்கும் மேற்பட்ட தனித்துவமான வியக்க வைக்கும் தொகுப்பை உருவாக்கி தங்களது சிறப்பான திறன்களையும், கைவினைத்திறனையும் வெளிப்படுத்தினர்.லம்பானி எம்பிராய்டரி என்பது பாரம்பரிய சிவப்பு நிற துணியில் கண்ணாடி, பல வண்ணங்கள் கொண்ட சிக்கலான வடிவத்தை கைகளால் உருவாக்குவதாகும். ஆப்கானிஸ்தானை பூர்வீகமாக கொண்ட பழங்குடியின நாடோடி சமூகமான, லம்பானி மக்கள், ராஜஸ்தானின் மேவாரில் இருந்து கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் பரவி வசித்து வருகின்றனர்.அனுபவமிக்க லம்பானி கைவினை கலைஞரான சாந்தாபாய் கூறுகையில், கின்னஸ் சாதனை படைத்ததில் மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். இந்த சாதனையானது சர்வதேச சமூகத்திற்கு எங்களது திறமை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த அங்கீகாரம் எங்கள் சமூகத்திற்கு அதிக வாய்ப்புகளைத் தருவதோடு, எங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் என்று நம்புகிறோம். என்றார்.லம்பானி கைவினைஞர்களின் அபரிமிதமான திறமை மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்த ஜி20 கூட்டம் ஒரு வாய்ப்பை வழங்கியது. லம்பானி கைவினைஞர்களின் சாதனை, ஜி20 சமூகத்தில் உள்ள கலாச்சார பன்முகத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. விளிம்புநிலை சமூகங்களை மேம்படுத்தும் முயற்சிகள் மூலம், லம்பானி கைவினைஞர்கள், மற்ற சமூகங்களும், தனிநபர்களும் தங்கள் கலாச்சார பாரம்பரியத்தைப் பாராட்டவும் பாதுகாக்கவும் ஊக்குவிப்பார்கள் என நம்புகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்