உள்ளூர் செய்திகள்

ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்

இதுகுறித்து, தொழில்துறை அதிகாரிகள் கூறியதாவது:இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் குறித்த அறிக்கையை, மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதில், 2022 - 23ம் நிதியாண்டில் தமிழகத்தில் இருந்து, 65,513 கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது, 2021 - 22ம் நிதியாண்டில், 70,982 கோடி ரூபாயாக இருந்தது. குஜராத் மாநிலம் 38,851 கோடி ரூபாய் ஏற்றுமதியுடன் இரண்டாவது இடத்திலும், மஹாராஷ்டிரா மாநிலம், 31,000 கோடி ரூபாய் ஏற்றுமதியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.கடந்த 2018 - 19ம் நிதியாண்டு முதல், தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக, ஜவுளி ஏற்றுமதியில், தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இதே போல, 2020 - 2021 முதல், குஜராத் மாநிலம் இரண்டாவது இடத்திலும், மஹாராஷ்டிரா மாநிலம் மூன்றுவாது இடத்திலும் உள்ளன. நடப்பு நிதியாண்டிலும், ஜவுளி ஏற்றுமதியில், 9,350 கோடி ரூபாயுடன் தமிழகம் முதல் இடத்தில் நீடிக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்