ஆராய்ச்சி நிதியுதவி விண்ணப்பம் வரவேற்பு
சென்னை: பேராசிரியர்களுக்கு ஆராய்ச்சி நிதியுதவிக்கான விண்ணப்பங்களை பதிவு செய்ய, தமிழக அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, அந்த மன்றம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழகத்தில் உள்ள பல்கலைகள், கல்லுாரிகள், ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்களுக்கு, ஆராய்ச்சி மேற்கொள்ள இரண்டு ஆண்டுகளுக்கு 3 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். இதற்கான அறிவியல் திட்ட வரைவுகளை, வேளாண் அறிவியல், உயிரியல், வேதியியல், சுற்றுச் சூழலியல், பொறியியல் தொழில்நுட்பம், கணக்கியல், மருத்துவம், இயற்பியல், கால்நடை அறிவியல் மற்றும் சமூகவியல் ஆகிய 10 பிரிவுகளில் அனுப்பலாம்.திட்ட வரைவுகளை, உறுப்பினர் செயலர், தமிழக அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், தொழில்நுட்ப கல்வி இயக்குனரக வளாகம், சென்னை என்ற முகவரிக்கு, ஆக.,17 க்குள் அனுப்ப வேண்டும். விபரங்களை, www.tanscst.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.