உள்ளூர் செய்திகள்

நல்லாசிரியர் விருது தேர்வுக்குழுவில் அங்கீகாரம்

கோவை: நல்லாசிரியர் விருதுக்கான தேர்வுக்குழுவில், அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு, உறுப்பினராக பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் நினைவாக, கற்பித்தல் பணியில் சிறப்பாக ஈடுபடுவோருக்கு, மாநில நல்லாசிரியர் விருது, ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கான, மாவட்ட தேர்வுக்குழுவில், முதன்மை கல்வி அலுவலர் தலைவராகவும், மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் என, ஐந்து பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு, விருதுக்கு விண்ணப்பித்தோரின், தகுதிகள் ஆய்வு செய்யப்படும்.மாவட்ட வாரியாக அனுப்பப்படும் பரிந்துரை பட்டியலில் இருந்து, மாநில அளவில் ஆண்டுக்கு, 386 பேருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. விருது குழுவில், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கும், உறுப்பினர் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்தது. இக்கோரிக்கை ஏற்று, விருதுக்கான தேர்வுக்குழு உறுப்பினர் பட்டியலை அதிகரித்து, ஆணை வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாநில தலைவர் அன்பரசன் கூறுகையில், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன், சமீபத்தில் அமைச்சர் நடத்தியகலந்துரையாடலில், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்றான, தேர்வுக்குழு உறுப்பினர் பிரதிநிதித்துவம் வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இதைபோல, மற்ற கோரிக்கைகளும் விரைவில் பரிசீலிக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்