உள்ளூர் செய்திகள்

தாய்மொழி கல்வி அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: பயிற்று மொழியாக, தாய்மொழிக்கல்வியை பயன்படுத்துவது தொடர்பாக, சி.பி.எஸ்.இ., உத்தரவை போல், தமிழக பள்ளிகளுக்கும் தமிழக அரசு வழங்க வேண்டும் என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் சமீபத்திய சுற்றறிக்கை, நாடு முழுதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகள் உயர்நிலை வரை இந்திய மாநில மொழிகளை பயிற்று மொழியாக பயன்படுத்துவதை கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு உள்ளது. மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எடுத்துள்ள நடவடிக்கைக்கு, தமிழக பா.ஜ., சார்பில் பாராட்டுகள். தாய்மொழிக் கல்வி, உண்மையான படைப்பாற்றலை உருவாக்கும் என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இதேபோன்ற உத்தரவை, தமிழக பள்ளிகளுக்கும் வழங்குமாறு, இந்த வாய்ப்பை பயன்படுத்தி தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்