உள்ளூர் செய்திகள்

பள்ளிகளில் உணவுக்கு பதில் வாழைப்பழம்

சிக்கபல்லாபூர்: உணவு தானியங்கள் இல்லாததால், பசியை போக்க மதிய உணவு வேளையில் வாழைப்பழம் சாப்பிட்ட மாணவ - மாணவியர். இடம்: அரசு துவக்க பள்ளி, கவுரிபிதனுார், சிக்கபல்லாபூர்.கவுரிபிதனுாரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கு கடந்த ஒரு மாதமாக உணவு தானியங்கள் வழங்காததால், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதிலாக வாழைப்பழம் வழங்கப்பட்டது. சிக்கபல்லாபூர் மாவட்டம், கவுரிபிதனுாரில் அரசு இளநிலை துவக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் அரசு சார்பில் காலையில் பால், மதியம் உணவு, முட்டை வழங்கப்பட்டு வருகிறது.* ஆசிரியர்கள் அவதிஆனால், ஜூலை மாத துவக்கத்தில் இருந்து அரசு பள்ளிகளுக்கு உணவு தானியங்கள், பால் பவுடர் வழங்கப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், ஆசிரியர்கள் முறையிட்டனர். அதற்கு அதிகாரிகள், அருகில் உள்ள மற்ற பள்ளிகள், அங்கன்வாடிகளில் பெற்று கொள்ளுங்கள் என ஒரே மாதிரி பதில் அளிக்கின்றனர். இதனால், ஆசிரியர்களும் மற்ற பள்ளிகளில் இருந்து அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, காஸ் சிலிண்டரை கடன் வாங்க, வரிசையில் காத்திருக்கின்றனர்.* சாம்பார் பொடிஅரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:உணவு தானியங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. கடந்த ஜனவரி முதல் சாம்பார் பொடி, இதர பொருட்கள் வாங்க அரசு நிதி வழங்கவில்லை. கடந்த ஆறு மாதமாக மளிகை கடை, காய்கறி சந்தையில் காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை கடனாக பெற முயற்சித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் செய்த போதும், பிரச்னை தீரவில்லை. மதிய உணவு வேளையில், மாணவர்களுக்கு வாழைப்பழம், பிஸ்கெட் மற்றும் பிற உணவுகளை வழங்கி, அவர்களின் பசியை போக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அம்பிகா கூறியதாவது:கடந்த ஒரு மாதமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது சவாலாக உள்ளது. இது குறித்து, பலமுறை கல்வி அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்து சொல்லியும் பலனில்லை. இதனால், அரசு பள்ளிகள் மீது பெற்றோருக்கு நம்பிக்கை போய்விட்டது. அதிகாரிகள் விழித்து கொண்டு, பள்ளிக்கு தேவையான உணவு பொருட்களை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.தாலுகா உணவு துறை உதவி இயக்குனர் நரசிம்மப்பா கூறியதாவது:தாலுகாவில் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில், இரண்டு மூன்று மாதங்களுக்கு அதிகமான உணவு தானியங்கள் மீதம் உள்ளன. அதில் புழுக்கள் வந்து விடுமோ என்ற காரணத்தால், அங்கிருந்து உணவு தானியங்களை வாங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. சில தொழில்நுட்ப பிரச்னைகளால் அரசிடம் இருந்து நிதி வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. அடுத்த வாரம் முதல் அனைத்தும் முறையாக நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.தாலுகாவின் உணவுத் துறைக்கு குறிப்பிட்ட நேரத்தில் உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், அவற்றை பள்ளிகளுக்கு அனுப்புவதில், அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்