வகுப்பறைகளை திறந்து வைத்தார் முதல்வர்
சென்னை: திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைத்தார் முதல்வர்.தமிழகத்தில் முதன் முறையாக திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் 303 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு 6 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறைகளை முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார். ராதாபுரத்தில் நடந்த நிகழ்வில் சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.