உள்ளூர் செய்திகள்

நாளை முதல் யோகா பயிற்சி

மதுரை: மதுரை மகாத்மா காந்தி யோகா நிறுவனம் சார்பில் ஒரு மாத யோகா பயிற்சி ஆக.2ல் துவங்குகிறது. இதில் எளிய ஆசனங்கள், ஓய்வு உத்திகள், பிராணாயாமம், தியானப் பயிற்சிகள் பயிற்றுவிக்கப்பட உள்ளன.தெப்பக்குளம் கீதா நடன கோபால நாயாகி மந்திர், ஆண்டாள்புரம் விவேகானந்த மடாலயத்தில் தினமும் காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை நடக்கிறது. பெண்களுக்கான பிரத்யேக பயிற்சி தெப்பக்குளம் பாலாஜி நர்சிங் ஹோமில் காலை 10:30 மணிமுதல் 11:30 வரை நடக்கும். மேலும் விபரங்களுக்கு இயக்குநர் கங்காதரனை 94875 37339ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்