உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் துவங்குகிறது நிட்ஷோ கண்காட்சி

திருப்பூர்: நடப்பாண்டு, 21வது நிட்ஷோ கண்காட்சி, திருப்பூர் - காங்கயம் ரோட்டில் உள்ள டாப்லைட் வளாகத்தில் வரும் ஆக. 11ல் துவங்க உள்ளது; 13ம் தேதி வரை தொடர்ந்து மூன்றுநாட்கள் நடைபெறுகிறது.கண்காட்சிக்காக, சர்வதேச தரத்தில் ஆறு பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை இல்லாதவகையில், 500க்கும் மேற்பட்ட ஸ்டால்களில், உலகளாவிய நாட்டு நிறுவனங்களின், அதிநவீன ஆடை உற்பத்தி மெஷினரிகள் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.நிட்ஷோ கண்காட்சி நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா கூறியதாவது:நாட்டின் மிகப்பெரிய கண்காட்சியாக, நிட்ஷோ மாறியுள்ளது. உள்நாடு மற்றும் ஐரோப்பா, போர்ச்சுக்கல், சீனா, தைவான் போன்ற வெளிநாடுகளை சேர்ந்த 328 நிறுவனங்களின், உயர் தொழில்நுட்ப நவீன ஆடை உற்பத்தி சார்ந்த மெஷின்கள் அனைத்தும் இடம்பெற உள்ளன.500 அரங்குகள்கண்காட்சியில், 500க்கும் மேற்பட்ட அரங்குள் அமைத்துள்ளன. சர்வதேச அளவில் மிகப்பெரியதாக கருதப்படும் இட்மா கண்காட்சி, கடந்த ஜூன் மாதம் ஸ்பெயினில் நடைபெற்றது. அதில், இடம்பெற்ற அனைத்து மெஷின்களையும், திருப்பூரில் நடைபெறும் நிட்ஷோவில், முழு இயக்க நிலையில் பார்க்கமுடியும்.மிகப்பெரிய 10 நிறுவனங்கள், நேர்த்தியான பின்னல் துணி உற்பத்திக்கு கைகொடுக்கும் புதுரக நிட்டிங் மெஷின்களை இடம்பெறச் செய்கின்றன; உலகின் அனைத்து முன்னணி நிறுவன சூயிங் மெஷின்களும் வருகின்றன. டிஜிட்டல் உட்பட நவீன பிரின்டிங் மெஷின்கள், பிரின்டிங் சார்ந்த அக்சசரீஸ்களுடன் என பிரின்டிங்கிற்கான பிரத்யேக கண்காட்சியாகவும் அமையும்.பிரிட்டன் மற்றும் சீனாவின் பெரிய நிறுவனங்கள், லேஸ், டேப் ரோப் தயாரிப்பு மெஷின்களை கொண்டுவருகின்றன. திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர், 50 வகையான துணி ரகங்களில் மட்டுமே ஆடை தயாரிக்கின்றனர்.நிட்ஷோவில், பஞ்சாப், குஜராத் நிறுவனங்கள் தயாரிப்பில், பருத்தி, பருத்தி மற்றும் பாலியெஸ்டர் கலப்பு என செயற்கை நுாலிழைகளில் தயாரிக்கப்பட்ட 300 வகை பின்னல் துணி ரகங்கள் இடம்பெறும். இதன்மூலம், திருப்பூர் நிறுவனங்களின் மதிப்பு கூட்டு ஆடை தயாரிப்பு எளிதாகும்; வெளிநாடுகளிலிருந்து புதிய ஆர்டர்களை கவர்ந்திழுக்க முடியும். நிட்ஷோ வுக்குப்பின், தொய்வு நிலைகள் விலகி, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையில் நிச்சயம் மிகப்பெரிய திருப்பம் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்