உள்ளூர் செய்திகள்

ஆய்வக தொழில்நுட்ப அறிவியல் மாநாடு

மதுரை: மதுரையில் மெடி லேப் டெக்கான் எனும் மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பவியலாளர்களின் அறிவியல் மாநாடு மற்றும் கண்காட்சி இந்திய மருத்துவ சங்க கட்டடத்தில் நடந்தது.மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பவியலாளர் சங்க அமைப்பு செயலாளர் மரியதாஸ் வரவேற்றார். மதுரை மருத்துவகல்லுாரி டீன் ரத்தினவேல் துவக்கி வைத்து விழா மலரை வெளியிட, டாக்டர் கோமதிநாயகம் பெற்றார். மலேரியா ஒழிப்பு அலுவலர் வரதராஜ், ஆலோசகர் செல்லம், ஆய்வுக்கூட நுட்புனர்கள் சங்க நிர்வாகிகள் இளங்கோவன், செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.இதையொட்டி பரிசோதனை மற்றும் சிகிச்சையில் ஆய்வு நடத்துதல் என்ற தலைப்பில் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, கல்லீரல் நோய்கள், கல்லீரல் செயல்பாடு சிகிச்சை குறித்து டாக்டர் அருண், பூஞ்சாணங்களின் ஆய்வில் நாம் எங்கே இருக்கிறோம் என்ற தலைப்பில் டாக்டர் வசந்தபிரியன், உலக தரத்திலான விந்தணு தரம் குறித்த ஆய்வு குறித்து டாக்டர் ஆலயமணி கண்ணன் பேசினர்.நவீன மருத்துவ ஆய்வுக்கூட உபகரணங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்