தலைவர்கள் பிறந்தநாள் -பேச்சுப்போட்டி
திண்டுக்கல்: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 2021-22 ஆண்டிற்கான மானியக்கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லுாரி,பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது.பெரியார் பிறந்தநாளையொட்டி செப்.26ல் கல்லுாரிகளில் பயிலும் மாணவர்களிடையே பேச்சுப் போட்டி காலை 10.00 மணிக்கு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. பங்கேற்கும் மாணவர்களை, கல்லுாரி முதல்வர் மூலம் போட்டிக்குரிய பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்ப வேண்டும். மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5000, 2ம் பரிசாக ரூ.3000, 3ம் பரிசாக ரூ.2000- பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.