டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விருத்தாசலத்தில் பயிற்சி
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லுாரியில், கடலுார் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் ராஜவேல் தலைமை தாங்கினார். பேராசிரியர் பரமசிவம் வரவேற்றார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆறுமுக வெங்கடேஷ், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வெங்கட்ராஜன் ஆகியோர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினர்.இதில், அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் விஜயகாந்த் நன்றி கூறினார்.