உள்ளூர் செய்திகள்

பாரதிதாசன் பள்ளியில் ஓவிய கண்காட்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் ஓவிய கண்காட்சி நேற்று நடந்தது.இந்தகண்காட்சியில் மாணவர்களின் சமுதாய சிந்தனை, கற்பனை திறன் மேம்படுத்தும் வகையில் பெண் குழந்தையை பாதுகாத்தல், பெண்களுக்கு அதிகாரமளித்தல், வேற்றுமையில் ஒற்றுமை, தொழில்நுட்பத்தின் தாக்கம் மற்றும் எதிர்காலம், கடல்சார் உயிரினங்கள், இயற்கை காட்சிகள், கார்ட்டூன் கதாப் பாத்திரங்கள் போன்ற தலைப்புகளில் மாணவர்கள் ஓவியங்களை படைத்திருந்தனர். பெற்றோர் மற்றும் பொது மக்கள் ஓவிய கண்காட்சியை கண்டு மகிழ்ந்தனர்.சிறப்பாக ஓவியம் தீட்டிய மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் உமா சங்கர் பரிசுகள், சான்றுகள் வழங்கி பாராட்டினார். விழாவில் தலைமை ஆசிரியர்கள் மேரி, குமரீஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்