உள்ளூர் செய்திகள்

வடபழனி ஆண்டவர் கோயிலில் வித்யாரம்பம்

சென்னை: வடபழனி ஆண்டவர் கோயிலில், விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளின் விரல் பிடித்து துவக்க கல்வியை ஆரம்பிக்கும், வித்யாரம்பம் நிகழ்ச்சி இன்று (அக்.,24) நடைபெற்றது.சென்னை, வடபழனி ஆண்டவர் கோயிலில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் பிரதானமாக, அம்பாளுக்கு தினசரி சிறப்பு அலங்காரம் செய்யப்படுகின்றன.விழாவின் நிறைவு நாளான நேற்று, சரஸ்வதி அலங்காரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக நேற்று காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று மாலை, சகஸ்ரநாம பாராயணம் செய்தனர். இதைத்தொடர்ந்து வேத பாராயணம், திருமுறை பாராயணம், மகளிர் குழுவினரின் கொலு பாட்டு நடந்தது.விஜயதசமியை முன்னிட்டு, இன்று காலை 7:30 மணி முதல் 10:00 மணி வரை, 2.5 வயது முதல் 3.5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு விரல் பிடித்து துவக்க கல்வியை ஆரம்பிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான குழந்தைகள் வடபழனி ஆண்டவரை தரிசித்து அ எழுதி கல்வியை துவங்கினர். நிகழ்ச்சியில் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் குழந்தைகளின் விரல் பிடித்து அ னா ஆவன்னா எழுத வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்