உள்ளூர் செய்திகள்

கல்விக்கடன் குறித்து விழிப்புணர்வு முகாம்

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் உதவி முன்னேற்ற மையம் சார்பில், கல்விக்கடன் பெறுவது குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.நுாலக அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு கலைப்புல முதன்மையர் விஜயராணி தலைமை தாங்கினார். மாணவர் உதவி மற்றும் முன்னேற்ற மைய இயக்குநர்தெய்வசிகாமணி வரவேற்றார். அண்ணாமலை நகர் இந்தியன் வங்கி கிளை மேலாளர் சுரேஷ். சென்ட்ரல் வங்கி இந்தியன் கிளை மேலாளர் நிலாத்திரிமலக்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவர்கள் வங்கியில் கல்வி கடன் பெறுவது குறித்தும், கடன் பெறுவதற்காக தேவைகள் குறித்தும் பேசினர்.நிகழ்ச்சியில் உதவி பதிவாளர் காசியம்மாள், பிரிவு அதிகாரி நிறைமதி, மாணவர் உதவி மற்றும் முன்னேற்ற மைய ஒருங்கிணைப்பாளர்கள். 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பிரிவு அதிகாரி சோமசுந்தரம் மற்றம் ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்