பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்றும் விடுமுறை
புதுச்சேரி: புதுச்சேரியில தொட ரும் கன மழை எதிரொலி யாக பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் ஏற்பட்டு காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக புதுச்சேரியில் நேற்று முன்தினம் மாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்ய துவங்கியது. இதனால், பள்ளி, கல்லுாரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் புதுச்சேரியில் நேற்றும் மழை தொடர்ந்து பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இந்நிலையில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனையொட்டி, பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று 15ம் தேதி அரசு விடுமுறை அறிவித்துள்ளது.