தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு
பவானி: வெள்ளித்திருப்பூர் அருகே எண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, தேசிய தரச்சான்றிதழ் வழங்குவது தொடர்பாக, தேசிய தரச்சான்றிதழ் மதிப்பீட்டு குழுவைச் சேர்ந்த சவிதா மற்றும் அகஸ்டின் ஜோசப் ஆய்வு மேற்கொண்டனர்.அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ வார்டு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மதிப்பீடு செய்தனர். அப்போது அந்தியூர் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன், மாநில தர மதிப்பீட்டாளர் டாக்டர் ராஜா ஸ்ரீதர், மாவட்ட தர மருத்துவ அலுவலர் செந்தில்குமார், எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் சதீஷ்குமார், மருத்துவர் சரவணபிரபு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.