தங்கையை காப்பாற்றிய சிறுமிக்கு விருது
துமகூரு: கிணற்றில் விழுந்த 2 வயது தங்கையை, தைரியத்துடன் காப்பாற்றிய 8 வயது சிறுமிக்கு, கெளதி சென்னம்மா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.துமகூரின், குச்சங்கி பாளையா கிராமத்தை சேர்ந்த ஷாலு, 8, அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார். சமீபத்தில் இவர் தன் 2 வயது தங்கையுடன் விளையாடினார். அப்போது எதிர்பாராமல் தங்கை, கிணற்றில் விழுந்துவிட்டார்.இதை கண்ட ஷாலு, சிறிதும் தாமதிக்காமல் வீட்டில் இருந்த லைப் ஜாக்கெட் அணிந்து கிணற்றில் குதித்து, தங்கையை காப்பாற்றினார். சிறுமியின் சமயோஜித குணத்தை, பலரும் பாராட்டினர். இவரது தீரச்செயலை கவுரவிக்கும் நோக்கில், மகளிர், குழந்தைகள் நலத்துறை, &'கெளதி சென்னம்மா&' விருது அறிவித்துள்ளது. பெங்களூரின், ஜவஹார பாலபவனில், குழந்தைகள் தினம் நிகழ்ச்சி இன்று நடக்கவுள்ளது. இதில் விருது வழங்கப்படுகிறது.