உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி

சென்னை: மிக்ஜாம் புயல் மழைக்கு பின், சென்னை, புறநகரில் அம்மை நோயால் ஆங்காங்கே பலர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, சென்னை மாநகராட்சியின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு தட்டம்மை தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.ஆலந்துார், பெருங்குடி மண்டலத்தில் பொது இடங்கள், பள்ளிகளில் தட்டம்மை தடுப்பூசி போடும் பணி, நேற்று மேற்கொள்ளப்பட்டது. ஆலந்துார், பெருங்குடி, அடையாறு, சோழிங்கநல்லுார் மண்டலத்தில், 6,000 பேருக்கு தடுப்பு மற்றும் கண் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வைட்டமின்- ஏ டானிக் வழங்கப்பட்டுள்ளது.பொது இடங்கள் மட்டுமின்றி அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் முகாம் நடத்தப்படுகிறது. தனியார் பள்ளியினர் விருப்பப்பட்டால், அந்தந்த மண்டல சுகாதார அலுவலரை தொடர்பு கொண்டால் பள்ளியில் முகாம் நடத்தி தடுப்பூசி போடப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்