உள்ளூர் செய்திகள்

தமுக்கத்தில் ரோபோடிக் பறவைகள் கண்காட்சி

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியில் முதன் முறையாக அமைக்கப்பட்டுள்ள ரோபோடிக் பறவைகளை காண மக்கள் ஆர்வமுடன் வருகின்றனர்.தளபதி எம்.எல்.ஏ திறந்து வைத்த இக்கண்காட்சியில் மயில், நெருப்பு கோழி, பென்குயின் போன்ற பறவைகள், யானை, சிங்கம், புலி உருவங்களும் ரோபோடிக்கில் உருவாக்கி ஒலி, அசைவுகளுடன் அனைவரையும் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் செல்பி பாயின்ட்கள் உள்ளன. சைனீஸ் உணவுகள், 3டி காட்சிகள் என 50க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்