மஞ்சப்பை விருது பெற அழைப்பு
கோவை: பிளாஸ்டிக் இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு, தமிழக அரசு சார்பில் மஞ்சப்பை விருது வழங்கப்படுகிறது.ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு மாற்றாக, மஞ்சப்பை போன்ற சுற்றுச்சூழலுக்கு, உகந்த மாற்றுப்பொருட்கள் பயன்பாட்டை ஊக்குவித்து, சிறப்பாக செயல்படும் மூன்று பள்ளிகள், மூன்று கல்லுாரிகள், மூன்று சிறந்த வணிக வளாகங்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்பட உள்ளன.முதல் பரிசு ரூ.10 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.5 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை, collrcbe@nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, மே 1ம் தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.