டயாலிசிஸ் டெக்னீஷியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கடலுார்: கடலுார் அரசு தலைமை மருத்துவமனையில் முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தில், டயாலிசிஸ் டெக்னீஷியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் சிறப்பு சிகிச்சை முறையான டயாலிசிஸ் பிரிவில் டெக்னீஷியனாக (2 பணியிடங்கள்) பணிபுரிய தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விண்ணப்பதாரர்கள் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையத்தில் டயாலிசிஸ் டெக்னீசியன் பட்டய படிப்பு முடிக்க பெற்றவராகவும், குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும், கடலுார் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.எனவே, இப்பதவிக்கு தகுதியுடையோர் தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை கல்வி தகுதி, பட்டயப்படிப்பு சான்றிதழ், ஆதார் கார்டு மற்றும் இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றுடன், வரும் 30ம் தேதிக்குள் தபால் மூலமாகவோ (அ) நேரடியாகவோ, மருத்துவமனை கண்காணிப்பாளர், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, நெல்லிக்குப்பம் மெயின் ரோடு, கடலுார் - 607 001. என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.மாத ஊதியமாக 12,000 ரூபாய் வழங்கப்படும், இந்த பணியை நிரந்தர பணியாக உரிமை கோர முடியாது. இப்பணி முற்றிலும் தற்காலிகமானது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.