புத்தக திருவிழா இன்று துவக்கம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் புத்தக திருவிழா, கலெக்டர் வளாக மைதானத்தில், இன்று, இரண்டாம் ஆண்டாக துவங்குகிறது. வரும் 19ம் தேதி வரை புத்தக திருவிழா நடைபெற உள்ளது.புத்தக திருவிழாவை முன்னிட்டு, 100 அரங்குகள், கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள், சிறப்பு அழைப்பாளர்களின் சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.காலை 10:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை புத்தக காட்சி நடைபெறும். பள்ளி மாணவ - மாணவியரை, இப்புத்தக திருவிழாவுக்கு அழைத்து வரவும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.இன்று துவங்கும் புத்தக திருவிழா, 19ம் தேதி வரை, 11 நாட்கள் வரை நடைபெறும் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.