புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாநாடு
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகம் உயிர் தகவலியல் துறை சார்பில், உடல்நலம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் உயிர் தகவலியல் தொடர்பான சர்வதேச மாநாடு நடந்தது.பல்கலைக்கழக கருத்தரங்கம் கூடத்தில் நடந்த மாநாட்டிற்கு, பல்கலைக்கழக துணைவேந்தர் தரணிக்கரசு தலைமை தாங்கினார். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் பேராசிரியர் சந்திரசேகரன், உயிரிதகவலியல் ஆராய்ச்சியின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து பேசினார்.மாநாட்டில் எஸ்.ஆர்.எம்., இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஆராய்ச்சிப் பேராசிரியர் வேல்முருகன் மாநாட்டினை துவக்கி வைத்து, உடல்நலம் மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான முக்கிய சிக்கல்களைத் தீர்ப்பதில் உயிர்தகவலியல் முக்கியத்துவம் குறித்து பேசினார்.புதுச்சேரி நிதி, கல்வி, தொழில்கள், வர்த்தகம் மற்றும் துறைமுகம் செயலாளர் ஆஷிஷ் மாதோராவ் மோர் வாழ்த்துரை வழங்கினார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு இயக்குனர் ஜோசப் செல்வின் நோக்கவுரையாற்றினார்.பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் பேராசிரியர் திலகன் வேளாண்மை மற்றும் ஆற்றல் துறைகளில் உயிர் தகவலியல் துறையின் முக்கிய பங்கு குறித்து பேசினார். ஏற்பாடுகளை பேராசிரியர் லட்சுமி கன்வீனர், பேராசிரியர்கள் அமுதா, முரளி ஆகியோர் செய்திருந்தனர்.