தாய்லாந்து சர்வதேச ஷாப்பிங் திருவிழா
கோவை: கோவை கொடிசியா தொழில் கண்காட்சி வளாகத்தில், தாய்லாந்து சர்வதேச ஷாப்பிங் திருவிழா, நேற்று துவங்கியது. ஏப்., 1ம் தேதி வரை இந்த திருவிழா நடக்கிறது.இந்த ஷாப்பிங் திருவிழாவில், சோபா செட், சமையலறை, படுக்கையறை பொருட்கள், அவுட்டோர் பர்னிச்சர், வீட்டு அலங்காரப் பொருட்கள், மெத்தை விரிப்புகள், தரை விரிப்புகள், ஓவியங்கள், புத்தர், யானை, சிங்கம் சிலைகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.அரங்குககளில் மசாஜ் செய்யும் இயந்திரங்கள், எண்ணெய், மசாலா பொருள்கள் தயாரிக்கும் இயந்திரங்கள், ஜீரோ கிராவிட்டி சேர்ஸ், மூங்கிலால் செய்யப்பட்ட சமையலறைப் பொருட்கள், நாட்டு மருந்துகள், சிறுதானிய மிக்ஸ், பார்வையாளர்களை கவர்கின்றன.தாய்லாந்து பெண்கள் அணிகலன்கள், முத்து நகைகள், மர சமையலறைப் பொருட்கள், தாய் தைலம், தாய் ஸ்பா தயாரிப்புகள், துருக்கி விளக்குகள், ஆப்கானிஸ்தான், ஈரான் உலர் பழங்கள், பெண்கள் குழந்தைகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. இக்கண்காட்சிக்கு அனுமதி கட்டணம் 30 ரூபாய்.