உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வாணிப செட்டியார் நல சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம், வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே தனியார் மண்டபத்தில் நடந்தது.கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. சங்கத்தின் புதிய தலைவராக மனோகர், செயலாளராக குமார், பொருளாளராக தனபால், உதவி செயலாளராக பாலசுப்பிரமணியம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக, மகளிர் உட்பட எட்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இந்தாண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்குவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்