தொழில்முனைவோர் டிப்ளமா படிப்பு
அகமதாபாத்தில் உள்ள இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்துடன் உடன் இணைந்து, தொழில்முனைவோருக்குத் தேவையான திறன்களை வளர்க்கும் வகையில் ஓர் ஆண்டு டிப்ளோமா படிப்பை, தமிழக அரசு வழங்குகிறது.சென்னையில் உள்ள தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் - இ.டி.ஐ.ஐ., தலைமையகத்தில் வழங்கப்படும் இப்படிப்பில் ஆண்டுக்கு 500 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி கட்டணம் ஒரு லட்சம் ரூபாய். 21 முதல் 30 வயது வரையிலானவர்கள் இப்படிப்பில் சேரலாம். கூடுதலாக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட பிரிவினருக்கு 100 சதவீத கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.