சென்னை பல்கலையில் அட்மிஷன்
சென்னை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 18 பள்ளிகளின் கீழ் 87 துறைகளில் ஏராளமான ஆராய்ச்சி படிப்புகள், முதுநிலை பட்டப்படிப்புகள், முதுநிலை டிப்ளமா படிப்புகள், டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. துறைகள்: ஆர்க்கியாலஜி, அனாடமி, ஆந்த்ரோபாலஜி, பயோகெமிஸ்ட்ரி, பயோ டெக்னாலஜி, ஹிஸ்ட்ரி, காமர்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், கவுன்சிலிங் சைக்காலஜி, கிரிமினாலஜி, சைபர் பாரின்சிக், டிபன்ஸ் அண்டு ஸ்டேடெஜிக் ஸ்டடீஸ், எக்னாமிக்ஸ், எனர்ஜி, எஜுகேஷன், இங்கிலிஷ், பிரெஞ்சு, ஜெனடிக்ஸ், ஜியாலஜி, ஹிந்தி, மியூசிக், ஜர்னலிசம் அண்டு கம்யூனிகேஷன், லீகல் ஸ்டடீஸ், மலையாளம், மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ், மெட்டீரியல் சயின்ஸ், மேத்ஸ், மெடிக்கல் பயோகெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பிசிக்ஸ், பிசியாலஜி, சமஸ்கிருதம், ஸ்டேடிஸ்டிக்ஸ், தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு துறைகளில் படிப்புகள் வழங்கப்படுகின்றன.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 30விபரங்களுக்கு: www.unom.ac.in