உள்ளூர் செய்திகள்

தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். தொடக்கக் கல்வி துறையில் பணியாற்றும் பெண்கள் உட்பட 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமையை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்தல், தொடக்கக் கல்வி துறையில் பதவி உயர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.வழக்கின் தீர்ப்பு வரும் வரை கலந்தாய்வு பொது மாறுதல்களை நிறுத்தி வைக்க வேண்டும். ஒன்றிய அளவில் மட்டுமே கலந்தாய்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்