தலைமை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு
கோவை: அரசு துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், இந்த கல்வியாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.கோவை மாவட்டத்தில் உள்ள நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஒன்றியம் வாரியாக இடம் மாறுதல் கலந்தாய்வு, கோவை டவுன்ஹாலில் உள்ள புனித மைக்கேல் பள்ளியில் நேற்று நடந்தது.இது குறித்து, மாவட்ட துவக்க கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் கூறியதாவது:அன்னுார், காரமடை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுநிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வுக்கு, 15 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.11 நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஏழு பேர் மாறுதல் பெற்றுக்கொண்டனர். நான்கு பேர் மாறுதல் வேண்டாம் என, தெரிவித்து விட்டனர்.நாளை (இன்று) 24 துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, இடம் மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. இந்த இடங்களுக்கு, 40 துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.