கல்லுாரி ஆசிரியர்கள் போராட முடிவு
திருநெல்வேலி: அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு நான்காண்டுகளாக பணி மேம்பாடு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை.இதை வலியுறுத்தி கல்லுாரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாளை (ஜூலை 6)தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் போராட்டம் நடக்கிறது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி முன் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.