முதுநிலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற தகுதியான மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.கல்லூரிகள்: மாநிலம் முழுவதிலும் மொத்தம் உள்ள 109 அரசு மற்றும் அறிவியல் கல்லூரிகள்.விண்ணப்பிக்கும் முறை: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கல்லூரிகளுக்கு www.tngasa.in எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம்: ரூ. 60. எஸ்.சி., / எஸ்.சி.ஏ., / எஸ்.டி., பிரிவினருக்கு 2 ரூபாய் மட்டும்.குறிப்பு: படிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், அந்தந்த கல்வி நிறுவன இணையதளத்தில் இருந்து தகுதியை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உரிய தகுதி இல்லாத விண்ணப்பங்கள் அந்தந்த கல்லூரியால் நிராகரிக்கப்படும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 7விபரங்களுக்கு: www.tngasa.in