பள்ளியில் கலெக்டர் ஆய்வு
விழுப்புரம் : கோலியனுார் அடுத்த திருப்பச்சாவடிமேடு துவக்கப் பள்ளியில், கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.விழுப்புரம் மாவட்டத்தில் கன மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. பள்ளியின் அடிப்படை வசதிகள் மற்றும் மாணவர்களுக்கான காலை உணவு திட்டம், மதிய உணவுடன் முட்டை வழங்கப்படுவதை கலெக்டர் ஆய்வு செய்தார்.கோலியனுார் அடுத்த திருப்பச்சாவடிமேடு துவக்கப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டி, வகுப்பறைகள் ஆகியவை பராமரிப்பு குறித்தும் கேட்டறிந்தார்.சி.இ.ஓ., அறிவழகன், விழுப்புரம் தாசில்தார் கனிமொழி, சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர் பெருமாள் உடனிருந்தனர்.