கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் படிப்பு
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஓர் ஆண்டுகால கல்வெட்டியல் மற்றும் தொல்லியில் பட்டயப் படிப்பை வழங்குகிறது.முக்கியத்துவம்: தமிழ் மக்களின் பெருமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, தொன்மை வாய்ந்த கல்வெட்டுகளை படித்தறிந்து கல்வெட்டுகளை படியெடுக்கவும், அவற்றை ஆவணப்படுத்தவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.பாடத்திட்டங்கள்: கல்வெட்டியல், தொல்லியல் மற்றும் கோயில் கட்டடக்கலை ஆகிய மூன்று தாள்கள் இடம்பெறுகிறது.கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சிவகுப்பு காலம்: ஓர் ஆண்டு காலம் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நேரடி வகுப்புகளாக நடைபெறுகிறது.கட்டணம்: விண்ணப்பக் கட்டணம், சேர்க்கைக் கட்டணம், அடையாள அட்டை, கல்விக்கட்டணம் அனைத்தும் உட்பட ரூ. 3 ஆயிரத்து 250.விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 30விவரங்களுக்கு: https://ulakaththamizh.in/