உள்ளூர் செய்திகள்

கல்லுாரி மைதானம் ஆக்கிரமிப்பு

திருநெல்வேலி: பாளை ஜான்ஸ் கல்லுாரி மைதானத்திற்கு நேற்று நள்ளிரவில் ஒரு தரப்பினர் குறிப்பிட்ட இடத்தை சுற்றி வேலி அமைத்து கற்களை நாட்டினர். தொடர்ந்து ஒரு சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைத்தனர்.இந்த தகவல் காலையில் கிறிஸ்தவ மக்களுக்கு தெரிய வர உடனே பலரும் அங்கு குவிந்தனர். அங்கு போடப்பட்டிருந்த வேலிகள் அப்புறப்படுத்தப்பட்டன. கண்காணிப்பு கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டு அகற்றப்பட்டன.தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்