எஸ்.என்.எஸ்., தலைவர் மறைவு
கோவை: எஸ்.என்.எஸ். கல்வி குழுமங்களின் தலைவர் சுப்ரமணியன், 75, வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார்.இவர், 30 ஆண்டுகளாக கல்விப்பணியோடு, சமுதாயப்பணிகளிலும் தன்னை இணைத்துக்கொண்டவர்.விளையாட்டுத்துறையிலும் மாணவர்களை ஊக்குவித்து வந்தார். இவரது மறைவுக்கு துறை சார்ந்த அதிகாரிகள், கல்வியாளர்கள், விளையாட்டு வீரர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.இவரது மனைவி ராஜலட்சுமி. மகள் கவியேத்ரா நந்தினி. மகன் நளின் விமல் குமார், எஸ்.என்.எஸ்., கல்வி குழுமங்களின் நிர்வாக இயக்குனராக இருந்து வருகிறார்.