உள்ளூர் செய்திகள்

சாலையின்றி மாணவர்கள் கல்வி பாதிப்பு

மைசூரு: சாலை வசதி இல்லாததால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.மைசூரு நஞ்சன்கூடு தாலுகா, ஹெடியாலா கிராமத்தில் உள்ள மகாதேவன் நகரில், நாடு சுதந்திரம் அடைந்தது முதல், இதுவரை அடிப்படை வசதிகள் இல்லை.மழை காலங்களில், சேறும், சகதியுமான பாதைகளில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு தினமும் செல்வதில்லை. அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பயனில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்