தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை:தமிழ் மொழி வளர்ச்சிக்கு பாடுபடும் அமைப்பு மற்றும் தனி நபர்களை ஊக்குவிக்க, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் தமிழ்ச்செம்மல் விருது மற்றும் 25,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படுகிறது.தகுதி உள்ளோர், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்கள் வாயிலாக அல்லது துறை இணையதளம் வாயிலாக செப்., 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.