உள்ளூர் செய்திகள்

காசோலையில் எழுத்துப்பிழை: ஆசிரியர் சஸ்பெண்ட்

சிம்லா: ஹிமாச்சலில், காசோலையில் எழுத்துப்பிழையுடன் எழுதிய அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.ஹிமாச்சல பிரதேசத்தின் சிர்மூர் மாவட்டத்தில் உள்ள ரோஹ்னாட் பகுதியில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, ஓவிய ஆசிரியராக பணியாற்றுபவர் அட்டர் சிங். இவர் கடந்த மாதம் 25ல், பள்ளி சார்பில் 7,616 ரூபாய்க்கு காசோலை ஒன்றை வழங்கினார்.அதில், தொகையை ஆங்கிலத்தில் எழுதும்போது, 'ஸாவென் தர்ஸ்டே சிக்ஸ் ஹரேன்த்ரா சிக்ஸ்டி' என குறிப்பிட்டிருந்தார். அதாவது ஏழு என்பதை, 'ஸாவென்' என்றும், 1,000 என்பதை, 'தர்ஸ்டே' என்றும் 100 என்பதற்கு, 'ஹரேன்த்ரா' என்றும் 16 என்பதை, 'சிக்ஸ்டி' என்றும் தவறாக எழுதியிருந்தார்.இதனால், இந்த காசோலையை வங்கி நிர்வாகம் நிராகரித்தது. இந்த காசோலை சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தவறாக காசோலையை எழுதிய ஓவிய ஆசிரியர் அட்டர் சிங்கை சஸ்பெண்ட் செய்து, மாநில பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்