துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை: மத்திய கல்வித் துறையின் கீழ் இயங்கும் திருவாரூர் மத்திய பல்கலையில், துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தகுதி உள்ளோர், கல்வி அமைச்சகத்தின் 'சமர்த்' வலைதளத்தில் உள்ள https://vcrec.samarth.ac.in/index.php' இணைப்பின் வாயிலாக, நவ., 8ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.