பழங்குடியினர் பள்ளியில் சமத்துவ பொங்கல்
பந்தலுார்: பந்தலுார் அருகே தேவாலா அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில், சமத்துவ பொங்கல் விழா நடந்தது.தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் தலைமை வகித்து, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் தனபாக்கியம், பி.டி.ஏ., தலைவர் சிவநேசமலர், உறுப்பினர் தியாகராஜா முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், பொங்கல் வைத்து, சிறப்பு பூஜைகள் செய்து, தாரை, தப்பட்டைகளுடன் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்றது. பழங்குடியின மாணவர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர். தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் விஷ்ணு தாஸ் நன்றி கூறினார்.அம்பலமூலா போலீஸ் நிலையம் சார்பில், பாட்டவயல் அருகே சந்தனசிறா பழங்குடியின கிராமத்தில் 'வன பொங்கல்' விழா நடத்தப்பட்டு, பழங்குடியின மக்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது.எருமாடு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட, குதிரம்பம் பழங்குடியின கிராமத்தில் டி.எஸ்.பி., கல்யாணகுமார் தலைமையில் பொங்கல் விழா நடந்தது. பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி, பொங்கல் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.நிகழ்ச்சிகளில் இன்ஸ்பெக்டர் சந்திரசீலன், சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார், பழங்குடியின மக்கள் பங்கேற்றனர்.