உள்ளூர் செய்திகள்

நேரு கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை: நேரு கலைக் கல்லுாரி மற்றும் மலேசியா இன்டிசர்வதேச பல்கலை இடையே, கல்விசார் ஒத்துழைப்பு வலுப்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.கல்வி நிறுவனங்களுக்கு இடையில் கூட்டு ஆராய்ச்சி திட்டங்கள் முன்னெடுப்பு, ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பரிமாற்ற திட்டங்கள், பாடத்திட்ட மேம்பாடு, உலகளாவிய கற்றல் வாய்ப்புகளை மையமாக கொண்டு ஒப்பந்த கோப்புகள் மாற்றிக் கொள்ளப்பட்டன.புரிந்துணர்வு ஒப்பந்த கோப்புகளை, மலேசியா இன்டி பல்கலை துணை துணைவேந்தர் வோங் லிங் ஷிங், மற்றும் நேரு கல்விக்குழும சி.இ.ஓ., கிருஷ்ணகுமார் ஆகியோர் கையெழுத்திட்டு மாற்றிக் கொண்டனர். நிகழ்வில், முதல்வர் விஜயகுமார், இன்டி பல்கலை ஆராய்ச்சி மேலாளர் டான் பூங் பிங், பி.கே.தாஸ் நிகர்நிலை பல்கலை பதிவாளர் அனிருத்தன், ஒருங்கிணைப்பாளர் ஜெயப்பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்